Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கடந்த 15 வருடங்களாக, தற்காலிகமாக இயங்கி வரும் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் அஞ்சல் துறை அமைச்சின் செயலாளா ஏ.அப்துல் மஜீத், திங்கட்கிழமை (02) தெரிவித்தார்.
இது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல், அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (02) நடைபெற்றது.
கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி வீ.விவேகானந்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் அஞ்சல் துறை அமைச்சின் செயலாளர் ஏ.அப்துல் மஜீத் கலந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலில் அம்பாறை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.ரூபசுந்தரபண்டா அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் யு.எல்.எம்.பைஸர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்கத்தினால் இதற்கான கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியடசர்அலுவலகமானது தற்காலிய அடிப்படையில் 2000ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்றது. இதன் மூலமாக 13 அஞ்சல் அலுவலகங்களினதும், 53 உப அஞ்சல் அலுவலகங்களினதும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
6 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
1 hours ago