Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், வசந்த சந்திரபால
அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர், புதன்கிழமை (08) இனங்காணப்பட்டதை அடுத்து, குறித்த நபர் இருந்த இடத்திலிருந்து 500 மீற்றர் வரையான சுற்றுவட்டாரம் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அக்கரைப்பற்றின் நிலவரம் தொடர்பில் கருத்துரைத்த கல்முனை சுகாதாரப் பிராந்தியச் சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன், மேற்படி நபர், வெளிநாடு ஒன்றில் இருந்து மதக் கடமைகளை முடித்த பின்னர், 16ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பியுள்ளார் என்றும் குறித்த நபருடன் இணைந்ததாக மேலும் ஐவரை, கொரோனா தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதற்கான அறிக்கைகளைப் பெற்றிருந்ததாகவும், அவர்களில் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
குறித்த நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை கொரோனா தடுப்பு மய்யத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றும் குறித்த நபருடன் நேரடித் தொடர்பிலிருந்த 9 பேரைத் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அந்த ஒன்பது பேரும், கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட நபருடன் இரண்டாம் நிலையில் தொடர்புள்ளவர்கள் என அறியப்படும் 43 பேர் அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களைத் தனிமைப்படுத்துவதா அல்லது தடுப்பு நிலையங்களுக்கு அனுப்புவதா என்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த வசித்த பகுதியிலிருந்து 500 மீற்றர் தூர சுற்றுவட்டாரம் முடக்கப்பட்டுள்ளதுடன், குறித்தப் பகுதியில் வசிப்போருக்கான அத்தியாவசியப் பொருள்களை அந்தந்த வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago