2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்றில் 23 அதிபர்கள் கடமையைப் பொறுப்பேற்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதிபர் சேவை தரம் -3 க்கு நியமனம் பெற்ற  புதிய அதிபர்கள் 23 பேர்  இன்று (01) தங்களின் கடமையைப்  பொறுப்பேற்றுள்ளனர் என அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அதிபர் சேவை தரம் -3 க்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்த  328 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள், மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அண்மையில் வழங்கி வைத்தார்.

மேற்படி வலயத்திலுள்ள பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பட்ட பாடசாலைகளிலேயே இப்புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .