Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
நாட்டில், தமிழ் மக்கள், தமது உறவுகளுக்கு அஞ்சலிகள், பிரார்த்தனைகளை நடத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைமைகள் கண்டிக்கப்பட வேண்டியதுடன், இந்த நிலைமைகள் மாறவேண்டுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை – திருக்கோவில், விநாயகபுரத்தில் நேற்று (27) மாலை இடம்பெற்று இருந்த கிரிக்கெட் சுற்றுப் போடியின் இறுதி நாள் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றகையில், “தமிழ் மக்களுக்காகவும் எமது தாயகத்துக்காக உயிர்நீத்த ஒவ்வொருவர்களையும் நாம் நினைவு கூரவேண்டிய கடமைப்பாடுடன் இருக்கின்றோம். நான் அவர்களுக்காக அஞ்சலிகளை செலுத்துகின்றேன். இதனை தடுப்பது என்பது தமிழ் மக்களின் மனங்களில் மீண்டும் மீண்டும் காயங்களை ஏற்படுத்துவதாககும்” என்றார்.
நாம் எப்போதும் தமிழ்த் தேசியத்துடன் இணைந்திருக்க வேண்டும். தமிழையும் தமிழ்த் தேசியத்தையும் உயிர் முச்சாகக் கொண்டு, தமிழுக்காக வாழ்பவர்களாக இருக்க வேண்டுமெனவும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
மேலும், அம்பாறை மாவட்ட மக்களுக்காக தான் தொடர்ந்தும் தன்னால் முடிந்த அபிவிருத்திகளுக்கான பங்களிப்புகளை முன்னெடுப்பதுடன், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago