2026 மே 09, சனிக்கிழமை

dd

ஜான்வி கபூருக்கு விரைவில் டும்…டும்…

Editorial   / 2026 மே 07 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

  

  பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூருக்கு, ஒரு தொழிலதிபருடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் 'கனவுக்கன்னியாக'த் திகழ்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான தடாக்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரூஹி’, குட் லக் ஜெர்ரி’, மிலி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து, பாலிவுட்டில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான தேவரா’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்துத் தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். அடுத்ததாக ராம் சரண் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் பெத்தி’ திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இதற்கிடையில், தொழிலதிபர் ஒருவருடன் ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகின. இந்நிலையில், ஜான்வி கபூரின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் இதற்கு விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனது மகளின் திருமணம் தொடர்பாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை; யாரும் இதனை நம்ப வேண்டாம்,” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜான்வி கபூரின் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .