2025 மே 15, வியாழக்கிழமை

அஞ்சல் அலுவலகங்களில் பொதுமக்கள் சிரமங்கள்

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில், சில கரும பீடங்கள், இன்றையதினம் (08) மூடப்பட்டிருந்தமையால், பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

அஞ்சல் திணைக்களத்தின் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கங்களின் முன்னணி முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கையால் அஞ்சல் அலுவலகங்களில் இன்று முதல் சட்டப்படி வேலைகளில் ஊழியார்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதனால், சட்டப்படி வேலைகளுக்கமைய, தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்டு, மந்த கதியில் அதன் செயற்பாடுகள் நடைபெற்றன.

தபால் திணைக்களத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆளனிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிவர்த்திக்குமாறு கோரியே, சட்டப்படி வேலையில் ஈடுபட்டுள்ளதாக, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.

இதேவேளை, தபால் சேவைகள் அமைச்சருக்கும், ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் நாளை (09) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு வழங்கப்படாத பட்சத்தில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும், அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .