கே.எல்.ரி.யுதாஜித் / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டச் செயலகத்தில் 250 மில்லியனில் அமையவுள்ள களஞ்சியம், அலுவலகம் ஆகியவற்றின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்நாட்டும் வைபவம், மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் இன்று (14) நடைபெற்றது.
அம்பாறை மாவட்டச் செயலகத்தின் இடவசதியை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 65 மில்லியன் நிதியொதுக்கீட்டில் இக்கட்டடத்தின் முதல் கட்ட வேலைகள், மாவட்டச் செயலகத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மும்மதத் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற இந்த அடிக்கல் நடும் வைபவத்தில், லாகுகல பிரதேச செயலகப் பிரதேச செயலாளர் யூ.பி.ஐ.எஸ்.சந்தருவான், மாவட்டச் செயலகப் பொறியியலாளர் எம்.ஐ.எம்.ராசீக், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, பிரதம கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, பிரதம உள்ளகக் கணக்காளர் ஏ.எல்.ஆதம்பாவா, வடிவமைப்பாளர் துசித்த இலங்கமகே, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களத்தலைவர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago