Princiya Dixci / 2022 மே 09 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்-19 இரண்டாவது பைஸசர் தடுப்பூசி இன்று (09) முதல் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர்.ஏ.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் மற்றும் தீகவாபி ஆகிய பிரதேசங்களிலுள்ள சகல பாடசாலைளிலும் 12 தொடக்கம் 16 வயது வரையிலான முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு இரண்டாவது பைஸசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (09) முதல் வெள்ளிக்கிழமை (13) வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, கொவிட்-19 மூன்றாவது தடுப்பூசி பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 04ஆவது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுகாதார வைத்தியதிகாரி காரியாலயத்துடன் தொடர்புகொண்டு தத்தமது பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்குச் சென்று தங்களுக்கான 04ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
மேலும், வெளிநாடு செல்பவர்கள் தடுப்பூசி தேவைப்படும் பட்சத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்ளை தொடர்புகொண்டு, தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago