Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜூலை 25 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
இந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்று வெளியான பழைய மாணவர்கள் ஒவ்வொருவரும், “இது எமது பாடசாலை. இதனை நாமே பார்க்கவேண்டும்” என்ற சிந்தனையில் செயற்படுவார்களானால் இந்த பாடசாலை ஓரிரு வருடங்களின் பின்னர் தேசிய ரீதியாக பல சாதனைகளை படைத்து ஒரு முதன் நிலை பாடசாலையாக சிறந்து விளங்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளுக்கும் இடமே இல்லை என வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.அன்சார் கூறினார்.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் 1999 ஆம் ஆண்டு க.பொ.தர சாதாரண தரத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களினால் ஒரு தொகுதி பூக்கன்றுகளை சாடியுடன் இன்று (25) வித்தியாலத்தின் அதிபர் எம்.ஏ.அன்சாரிடம் கையளித்து வைக்கும் நிகழ்வின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த பாடசாலையில் கல்விபயின்று வெளியேறிய மாணவர்கள் பிரதேச செயலாளராகவும் நிருவாக மாகாண பிரதிப் பணிப்பாளராகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதிப் பணிப்பாளராகவும் வலயக் கல்வி பணிப்பாளராகவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாகவும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களாகவுகவும் இன்னும் பல அரச சேவையில் பல உயர்பதவியில் வகிக்கின்றார்கள்.
இவர்களின் பார்வைகளும் இப்பாடசாலை மீது படுமாக இருந்தால் இப்பாடசாலையின் பாதை இன்னும் இன்னும் பல வெற்றி இலக்குகளை அடைய முன்னேறிச் செல்லும் என்றார்.
1999 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் இந்தப் பாடசாலை நமது பாடசாலை இதை நாமே பார்க்கவேண்டும். இந்தப் பாடசாலையை நாமே அழகுபடுத்தி பார்க்கவேண்டும் என்ற நற்சிந்தனையில் அவர்கள் தாமாகவே இன்று ஒரு தொகுதி பூக்கன்றுளை சாடியுடன் அன்பளிப்புச் செய்திருந்தமையை நான் பாராட்டியே ஆகவேண்டும். இவர்களைப்போன்று மற்றய பழைய மாணவர்களும் முன்வரவேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago