Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் (SLESA) 81வது ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை ( 28) அன்று கொழும்பில் உள்ள கிராண்ட் மேட்லண்ட் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை SLESAஇன் தலைவர் லெப்டினன்ட் கேர்ணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) வரவேற்றார்.
இதன்போது உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், மூன்று தசாப்தங்களாக நிலவிய கொடூரமான பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழிப்பதற்கு சரியான தலைமைத்துவம், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அப்போதைய முப்படைகளின் சிரேஷ்டஅதிகாரிகளால் முறையாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் காரணமாகும் என்று தெரிவித்தார்.
தாய்நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அமைதிக்காக அனைத்து ஓய்வுபெற்ற மற்றும் மரணம் அடைந்த யுத்த வீரர்களும் ஆற்றிய அளவிட முடியாத தியாகங்கள் மற்றும் விலைமதிப்பற்ற சேவைக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், நாடு நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் போது, யுத்த வீரர்களின் அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி தற்போதைய இளைஞர்களை ஊக்குவித்து வழிநடத்துவது மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். இது ஒரு தேசபக்தியுடைய மற்றும் ஒழுக்கமான சமுதாயத்தை கட்டியெழுப்ப பங்களிக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற அனைத்து யுத்த வீரர்கள், யுத்தத்தில் அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் உயிர்நீத்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனைக் காப்பதில் தற்போதைய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பாதுகாப்புச் செயலாளர் எடுத்துரைத்தார்.
பொது தின நிகழ்ச்சிகளின் போது இவர்கள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் சவால்களை மதிப்பாய்வு செய்த பின்னர், அது தொடர்பில் நடவடிக்கைகளை மேட்கொள்ளவும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட அவர்களின் நலன் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவை பரிந்துரைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் SLESA-வில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய உறுப்பினர்களுக்கு பாராட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், சங்கத்தின் தற்போதைய உறுப்பினர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருதுகளும் வழங்கப்பட்டது. திரு. குயின்டஸ் ஆண்ராடி, ரியர் அட்மிரல் அனில் போவத்த (ஓய்வு), கெப்டன் டி விஜேசிங்க (ஓய்வு) மற்றும் கெப்டன் ஐ.ஏ. சிறிசேன (ஓய்வு) ஆகியோர் சங்கத்திற்கு ஆற்றிய மகத்தான சேவைக்கு சிறப்பு கௌரவ விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற முப்படைத் தளபதிகள், விமானப்படைத் தளபதி, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் SLESA உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago