Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அட்டாளைச்சேனை அல் - முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஒன்று கூடல் நேற்று புதன்கிழமை(16) இரவு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
அதிபர் எம்.எச்.எம்.றஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தருமான மௌலவி யூ.எம்.நியாஸி, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளருமான கலாநிதி ஏ.எம்.ஜௌபர், அதிபர்களான எம்.ஐ.எம்.அப்துல்ஸலாம், எம்.ஐ.எம்.றியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, இவ்வாண்டு நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பெறுபேற்றை அதிகரிப்பதற்காக பிரத்தியேக வகுப்புகளை நடத்துதல், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்படுகளை மேலும் விருத்தி செய்வதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஊக்கப்படுத்தல்,2016ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்களை பாடசாலைக்கு இணைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
8 minute ago
12 minute ago
37 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
37 minute ago
54 minute ago