2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இருமல் சிரப்பால் 2 குழந்தைகள் பலி

Editorial   / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த இரு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் பெற்றோர் பதறிய நிலையில், மருந்து பாதுகாப்பானது தான் என்பதை நிரூபிக்க டாக்டரும் அந்த சிரப்பை குடித்துள்ளார். இருப்பினும், மருத்துவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் மயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் தரச்சான்றிதழ்களும் உள்ளன. இருப்பினும், அதையும் தாண்டிக் கூட சில நேரங்களில் மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படியொரு சம்பவம் தான் ராஜஸ்தானில் நடந்துள்ளது. அங்கு இருமல் சிரப் அருந்தியதால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

டெக்ஸ்ட்ரோமெத்தோர்ஃபன் ஹைட்ரோப்ரோமைடு என்ற இந்த இருமல் சிரப்பை, கேசன் பார்மா என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த திங்கட்கிழமை, ஐந்து வயது சிறுவன் ஒருவன் இந்த மருந்தை உட்கொண்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு தான் 2 வயது குழந்தையும் இதே சிரப்பை குடித்து உயிரிழந்திருந்தது.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் நிதீஷ், இருமல் மற்றும் சளி காரணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிராணா சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு மருத்துவர் இருமல் சிரப் ஒன்றைப் பரிந்துரைத்துள்ளனர். அந்த சிறுவனும் இரவு 11:30 மணியளவில் சிரப்பை குடித்துவிட்டுத் தூங்கச் சென்றுள்ளான்.

நடுவில் அதிகாலை 3 மணியளவில் நிதீஷ் ஒருமுறை எழுந்துள்ளான். இரவில் திடீரென இருமல் வந்ததால் சிறுவன் சிரமப்பட்டுள்ளான். இதையடுத்து அவனது தாய் தண்ணீர் கொடுத்து சமாதானம் செய்துள்ளார். பிறகு அவன் மீண்டும் தூங்கிவிட்டான். ஆனால், அதன் பிறகு அவன் மீண்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் திங்கள் காலையில் பதறிய பெற்றோர், அவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அதற்கு முன்பே அச்சிறுவன் உயிரிழந்தான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X