2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அணைக்கட்டு நிர்மாணம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பொத்துவில் பிரதேசத்தின் உல்லை, பசறிச்சேனையினூடாக செல்லும் துவைய ஆற்றில் நீர் பெருக்கெடுத்து,  அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதையையடுத்து, அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

துவைய ஆற்றின் அணைக்கட்டுகள் உடைந்து ஆறு பெருக்கெடுத்துள்ளதனால் அப் பிரதேசத்தில் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதுடன் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் கடும் அச்சத்துக்குள்ளானதோடு, பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஆறு உடைப்பெடுத்து வெள்ள நீர் கிராமத்தினுள் செல்லாமல் தடுப்பதற்கான பணியில் இலங்கை இராணுவப்படையின் பொத்துவில் பிரிவில் உள்ள படை வீரர்கள் இரண்டு நாட்கட்களாக அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.

பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் இராணுவத்தினரிடம் கேட்டுக் கொண்டதற்கினங்க அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணியில் இராணுவத்தினருடன் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொது மக்களும் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அணைக்கட்டு நிர்மாணப் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் பாராட்டினை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X