2025 ஜூலை 05, சனிக்கிழமை

அதிர்ஷ்ட இலாப சீட்டுகளை திருடிய இளைஞன் கைது

Princiya Dixci   / 2021 மார்ச் 21 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா 

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப் பகுதியில், கடந்த பல நாட்களாக  அதிர்ஷ்ட இலாப சீட்டுகளை திருடி வந்த நிலையில், இன்று (21) கையும்மெய்யுமாக பிடிபட்டுள்ள நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் சம்மாந்துறை பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் உள்ளாடைக்குள் இருந்து  175 அதிர்ஷ்ட இலாப சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்பனை முகவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இளைஞன் இந்தத் திருட்டை ஒப்புக் கொண்டுள்ளதுடன், இதுவரை 95,000 ரூபாய் பெறுமதியான அதிர்ஷ்ட இலாப சீட்டுகளை அவர் திருடியிருப்பதாக விற்பனை முகவர் முறையிட்டுள்ளார். 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .