2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அதிகாரங்கள் ஆளுநர்களிடம் உள்ளதால் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலைமை

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்,ரீ.கே.றஹ்மத்துல்லா

மாகாண சபைகளின் அனைத்து அதிகாரங்களும் ஆளுநர்களின் கைகளில் உள்ளதால், மாகாண சபைகளுக்கான மக்கள் பிரதிநிதிகளினால் சுதந்திரமாகச் செயற்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமலுள்ள நிலைமை வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகக் காணப்படுகின்றதென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் தெரிவித்தார்.

இது தொடர்பில் புதன்கிழமை (17) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வடமாகாணத்தின் புதிய ஆளுநராக றெஜினோல்;ட் குரே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை புதிய அரசாங்கத்தின் நல்லாட்சிக்கான வெளிப்பாடாகும். இதன் மூலம் வடமாகாண மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பாராட்டுத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

வடமாகாணத்துக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள றெஜினோல்ட் குரே சிறந்த அரசியல் அனுபவமுள்ளவர். குறிப்பாக, மாகாண சபை உறுப்பினராக இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு பின்னர் அமைச்சராக பதவி வகித்தவர். மேலும், மாகாண சபை முறைகள், அதிகாரப்பகிர்வுக்காக குரல் கொடுத்த அரசியல்வாதியும் ஆவார்' எனவே, அவரைப் போன்று  கிழக்கு மாகாண சபைக்கும் அதிகாரப்பகிர்வை அர்த்தபுஷ்டியானதாக மாற்றியமைக்கக் கூடியவரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய ஒருவராகவும் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்ட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

'தற்போதைய சூழ்நிலையில் வாக்களித்த மக்களின் தேவை அறிந்து சேவை செய்யமுடியாத நிலை எமக்கு ஏற்படுகிறது. குறைந்தது ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் இடம்மாற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாத நிலையில் கிழக்கு மாகாண சபை தற்போது தத்தளிக்கிறது' என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X