2025 மே 03, சனிக்கிழமை

அநீதியைச் சுட்டிக்காட்டிய ஆசிரியர்கள் பணி நீக்கம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இடமாற்றத்தின் போது இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டிய வட மாகாணத்தைச் சேர்ந்த 03 ஆசிரியர்கள், பழிதீர்க்கும் விதமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக, கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.

வட மாகாணத்தைச் சேர்ந்த குறித்த ஆசிரியர்கள் மூவரும், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து, இன்றையதினம் (15) சங்கத்தினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில், அவர் மேலும் தெரிவித்ததாவது,

இடமாற்றங்களின் போது, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக் கேட்ட ஆசிரியர்கள், தன்னைத் தாக்க வந்தார்கள் எனக்கூறி, வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின்  செயலாளரினால் கடந்த ஜனவரி 11ஆம் திகதி, 03 ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்ட சம்பவம்  மிகவும் துரதிஷ்ட வசமானது.

அந்த ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது நாகரிகமற்ற செயலாகும். இதனை அரச உத்தியேகத்தர் மீது, அரச அதிகாரிகள் மேற்கொள்ளும் அராஜகச் செயற்பாடாகவே, நாம் கருதுகின்றோம்.

யுத்த காலத்தில்  கூட  கல்வியில் முன்னணியில் இருந்த வட மாகாணம் தற்பொழுது, கல்வித் தரப்படுத்தலில் எட்டாவது  மாகாணமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணக் கல்வி அமைச்சரே இதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவராகும்.

இடமாற்றங்களின் போது இவ்வளவு குளறுபடியானால், நியமன அதிகாரங்கள் வழங்கப்பட்டால், நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும், வட மாகாண ஆசிரிய சமூகமும் வட மாகாணத்தில் இயங்கும் ஆசிரியத் தொழிற் சங்கங்களும் பலமுள்ளதாக மாற வேண்டும்.

தங்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை ஆசிரிய சமூகம் ஜனநாயக நீதியில் வன்முறையற்ற முன்மாதிரியான வழிமுறையில் தட்டிக் கேட்க வேண்டும்' என்று அதில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X