Editorial / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அனைத்துப் பட்டதாரிகளையும் புதிய வேலைவாய்ப்பில் இணைத்துக் கொள்ளும் செயற்றிட்டமொன்றை, அரசாங்கம் உருவாக்க வேண்டுமென, ஒன்றிணைந்த வேலையில்லாப் பட்டதாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் வேண்டுகோள் விடுத்தார்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுடனான கலந்துரையாடல், சாய்ந்தமருதில் நேற்று (22) நடைபெற்றது.
இதில், அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் முகமட் நிப்றாஸ், அதன் செயலாளர் முகமட் றியாஸ், அம்பாறை மாவட்டத்திலுள்ள வெளிவாரி, உள்வாரி பட்டதாரிகள் என 100க்கும் அதிகமானோர் கலந்துகொண்டார்கள்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது,
“இந்த அரசாங்கத்தால் புதிய ஆண்டில் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படும் நியமனம் தொடர்பான கலந்துரையாடல்களைத் தற்போது நடத்தி வருகின்றோம். எமது பட்டதாரிகளுக்கு எவ்வாறான நியமனம் வழங்க முடியும் என்பதை ஆராய குழுவொன்று, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
“எனினும், இதில் எமக்கு நம்பிக்கை கிடையாது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் கட்சி பேதமின்றி நியமனங்களை வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்” என்றார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago