2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2020 ஜனவரி 28 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், "இரண்டாம் நிலை நகரங்களின் நிலைத்தகு அபிவிருத்தி" திட்டத்தின் கீழ், கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்ட முன்மொழிவுகள் குறித்து ஆராயும் நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம், கல்முனை மாநகர முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28) நடைபெற்றது.

மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நகரத்திட்ட நிபுணத்துவ ஆலோசகர் எச்.கே.ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகளும் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கல்முனை மாநகர சபையின் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தபோது மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் “இரண்டாம் நிலை நகரங்களின் நிலைத்தகு அபிவிருத்தி” திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை உள்வாங்கப்பட்டு, சுமார் 2100 மில்லியன் ரூபாய் செலவில் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான அங்கிகாரம் கிடைத்திருந்தது.

இதன் பிரகாரம், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், மீள்பரிசீலனை செய்யப்பட்டு, அவற்றுக்கான உத்தேச மதிப்பீடு மற்றும் வரைபடங்களை தயாரிப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. அத்துடன், குறித்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நகரத்திட்டமிடல் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கள விஜயங்களை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X