Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு, சகா
அம்பாறை மாவட்டத்தில் தொடரும் வரட்சி காரணமாக பாரிய குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மக்கள் தொடர்ந்தும் அவதியுற்று வருகின்றனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் 30க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய நீரேந்தும் இடங்கள் வறண்டுள்ளன.
திருக்கோவில், சாகாமம் குளத்தில் நீர் இல்லா காரணத்தால் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவில், சுமார் 17ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர்.
வரட்சி காரணமாக நெற் செய்கைகள், வீட்டுத் தோட்டங்கள் பாதிக்கப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் வயல்கள் கைவிடப்பட்டு வருவதுடன், கால்நடைகளும் நீருக்காக அவதியுற்று வருகின்றன.
இதேவேளை, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டானைச்சேனை, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் நேற்று முதல் ஓரளவு மழை மாலை வேளையில் பெய்ந்து வருகின்ற போதிலும் நீண்டநாள் வரட்சியை போக்கக்கூடிய வகையில் மழை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
48 minute ago
55 minute ago
57 minute ago