Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் 2018/2019ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கை 175,500 ஏக்கரில் செய்கை பண்ணப்படவுள்ளதுடன், இதற்கான ஆரம்பவேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, சேனாநாயக்க சமுத்திரத்தின் வலது கரை வாய்க்கால் மூலமாக, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை வதிவிட திட்ட முகாமையாளர் பிராந்தியத்துக்குட்பட்ட பகுதிகளில், இம்முறை 24 ஆயிரத்து 10 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென, நீர்ப்பாசனத் திட்ட முகாமையாளர் எம்.கே.நழீம் தெரிவித்தார்.
விதைப்பு வேலைகளை, ஒக்டோபர் 15ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 15ஆம் திகதி வரையில் மேற்கொள்ளுமாறு, நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாய திணைக்களம் ஆகியன, விவசாயிகளுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளன.
பருவமழை ஆரம்பமானதையடுத்து, தற்போது உழவு வேலைகள், விதைப்பு நடவடிக்கைகள் மாவட்டத்தில் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago