Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 09 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில், சுமார் 26,500 சௌபாக்கிய வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.
மாவட்டச் செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், இந்த வேலைத்திட்டங்கள் மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அம்பாறை மாவட்டச் செயலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய சூழ் நிலையைக் கருத்திற்கொண்டு, விவசாய உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முகமாக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் உப பயிர் செய்கை திட்டத்தினூடாக, அம்பாறை மாவட்ட விவசாயிகள் சிறந்த வருமானத்தைப் பெற முடியுமென்றார்.
அத்துடன், செய்கை பண்ணப்படும் மரக்கறி வகைகளை விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்தால் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட செயலாளரின் ஆலோசனைக்கமைய, 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், வரம்புகளில் பயிர் செய்வதற்கு 20,000 பயிர் விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பயறு, கௌப்பி, கத்தரி, மிளகாய், கீரை போன்ற பயிர்கள் சிறந்த முறையில் செய்கை பண்ணப்பட்டு, வெற்றியளித்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago