2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு அதிகரிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டதில்  அண்மைக்காலமாக  கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக,  கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன்,  கடற்றொழிலை நம்பியே மீனவர்கள் ஜீவனோபாயத்தை  நடர்த்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான  கடந்த சில வாரங்களாக  கடலில் ஏற்பட்டுள்ள    நீரோட்டத்தின் தன்மையில்  ஏற்பட்டுள்ள  மாற்றத்தாலும், நீரோட்டத்தாலும்  மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனாலும் , தோணிகளைக் கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

மீன்பிடியை நம்பி வாழ்வை நடார்திவரும் மீனவ்ர்கள் மீன்பிடி குறைந்த்துள்ள காரணத்தால் மூலதனத்தை செலவுசெய்து கடலுக்கு சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிடுகினறது.

ஆழ் கடல் மீன்பிடிக்கு செல்லும் மீனவர்கள் பத்தாயிரக்கணக்கான ரூபாய் பணத்தை செலவழித்து கடலுக்கு செல்லும் நிலையில், ஆழ் கடலில்  நீரோட்டத்தில்  அடிக்கடி  போது ஏற்படும் சுழலினால் வலைகள்  சுருட்டப்பட்டு மீண்டும் மீன்பிடிக்க முடியாத நிலைக்கு வலைகள் நாசமாகின்றன எனத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .