2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒருமாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் காரணமாக, இடைநிறுத்தப்பட்டிருந்த நீதிமன்ற நடவடிக்கைகள், அம்பாறை மாவட்டத்தில், நேற்று (20) மீண்டும்ஆரம்பிக்கப்பட்டன.  

நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு, நீதிச்  சேவை ஆணைக்குழுவால் வெளியிடப்படட  சுற்றுநிரூபத்துக்கு அமைவாக, அம்பாறை மாவட்டத்தின், கல்முனை, சம்மாந்துறை நீதிமன்றங்களில் செயற்பாடுகள், வழமைபோன்று நேற்று (20) இடம்பெற்றன.  

இதன்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்குச்சட்டத்தை மீறி கைதானவர்களின் மனுக்கள், சட்டவிரோத நடவடிக்கைக்காக கைதானவர்களின் வழக்குகள் என்பன, மேற்படி நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .