2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நியமனம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவின் இணைப்பாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவின் புதல்வர் பி.கிருத்திகன் 
நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆலையடிவேப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் நீர் வழங்கல் அமைச்சால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கிலும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு சென்று அதனை தீர்த்து வைக்கும் நோக்கிலேயே, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அவரது அமைச்சின் அலுவலகத்தில் இன்று (11) காலை வழங்கி வைத்தார்.

பின்தங்கிய கிராமங்களில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைகளை முற்று முழுதாக தீர்த்து வைப்பதற்கும், ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள அனைவரும் சிறந்த குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கும் தனக்கு கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறப்பான முறையில் மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் கிருத்திகன் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .