Freelancer / 2023 ஜூன் 06 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி முன்னாள் தலைவரும், பாண்டிருப்பை வதிவிடமாக கொண்ட வைத்தியர் தோமஷ் தங்கத்துரை வில்லியம், இன்று (06) காலை காலமானார்.
அன்னார் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினராக இருந்து, தமிரசுக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் கொள்கை மாறாது பயணித்து சேவையாற்றினார்.
இவர் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் குறைகள், தேவைகளையும், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துதல் பற்றியும் 2009 ஆண்டு முதல் 2010ஆண்டு வரையும் தாம் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றிய காலப்பகுதியில் காத்திரமான சேவையாற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வைத்தியராக பல வருடங்கள் இருந்து பிரதேச பொது மக்களுக்கு சேவையாற்றி, மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
அன்னாரின் இறப்பு, பிரதேச பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், புத்திஜீவிகளுக்கும் பேரிழப்பாகும். பலர் அன்னாரின் வீட்டுக்கு சென்று பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு, அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றார்கள்.
அன்னாரின் இறுதி நல்லடக்கம், நாளை (07) புதன்கிழமை பி.ப 04 மணிக்கு பாண்டிருப்பில் நடைபெறும். (N)
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026