Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 25 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அமைச்சர் சஜித் பிரேமதாச யதார்த்தவாதி. ஏழை மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர். நாட்டில் யாரும் வீடற்றவர்களாக இருக்க கூடாது எனும் நோக்குடனும் மக்கள் அனைவருக்கும் சமமாக சேவையாற்றக்கூடிய மனப்பாங்குமிக்கவர். யாவருக்கும் புகலிடம் எனும் உயரிய சிந்தனை கொண்டவர் வீடமைப்புக்கே உரித்தான சிறந்த அமைச்சர் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (24) நடைபெற்ற வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படும் 'செமட செவன - 2016' தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சீமெந்துப் பொதிகளை இலவசமாகப் பகிர்ந்தளித்தல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலாம் கட்ட வெள்ள நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்கிவைத்தல் நிகழ்விலும் பிரதம அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஏழை மக்களோடு மக்களாக வாழ்ந்து வீடமைப்பிலே பெரும் புரட்சியை உருவாக்கிய மறைந்த மாபெரும் மனிதர் பிரேமதாசவின் வழி வந்த அவர், நுணுக்கமாகவும் நுட்பமாகவும் சிந்தித்து செயலாற்றுகின்ற திறமை மிக்கவர் எனவும் குறிப்பிட்டார்.
ஆகவே அவரது காலத்தில் வழங்கப்படும் இவ்வாறான செயற்றிட்டங்களை நாம் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இதன்போது கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தில் தமது வீடுகள் சேதமடைந்தமைக்கான 1,375,000 ரூபாவிற்கான காசோலைகளை பகுதியளவில் சேதமடைந்த 36 பேரும் முழுமையாகச் சேதமடைந்த 36 பேரும் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து 'செமட செவன - 2016' தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 10 சீமெந்துப் பொதிகள் வீதம் 42 பேருக்கு 420 சீமெந்துப் பொதிகள் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்வில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் பி.எஸ்.கலன்சூரிய சிறப்பு அதிதியாகவும் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் விசேட அதிதியாகவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ சேவைகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜன் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்.சுதர்சன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
32 minute ago
40 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
40 minute ago
52 minute ago