2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை(31) காலை 09.30 மணிக்கு அம்பாறை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவி சட்டத்தரணி சுமானா ஆரியதாச இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதன்போது,2015 தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற மாதாந்த கொடுப்பனவு மற்றும் கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளல், தேசிய கல்விக் கொள்கையில் முன்பள்ளி கல்வியையும் சேர்த்தல்,மாகாண சபை மட்டத்தில் நடைமுறைப்படுத்த உத்தியோசிக்கும் முன்பிள்ளைப் பருவ சாசனம் பற்றி கலந்துரையாடி குறைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு காணல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தல்,முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்நுக்கு தீர்வு காணல், தொழில் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல அனைத்து முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .