2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விஜய்யின் பிரச்சாரம் 2 வாரங்களுக்கு ரத்து

Freelancer   / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகின்றன என தமிழக வெற்றிக் கழகம்  அறிவித்துள்ளது.

இதுகுறித்து த.வெ.க. தலைமை நிலையச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில்,

நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவரின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X