Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்,வடிவேல் சக்திவேல்
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அம்பாறை மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தின் சிறந்த விவசாயிகளுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாறையில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சிவநாதன், மாகாண விவசாயப் பணிப்பாளர் ஹுசைன் விவசாய அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், ஐ. எல். ஒ அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கெமுனு மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, மாவட்டத்தில் விவசாயச் செய்கைகளின் சிறந்த வெளிப்பாட்டினை ஏற்படுத்திய விவசாயிகளுக்கு சிறந்த காளாண் செய்கையாளர், சிறந்த வர்த்தக ரீதியிலான மரக்கறி செய்கையாளர், சிறந்த வர்த்தக ரீதியிலான பழச் செய்கையாளர், சிறந்த விவசாய உற்பத்தியாளர் சங்கம், சிறந்த விவசாயப் புதுமை விரும்பி எனும் ஐந்து பிரிவுகளினூடாக பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மாவட்ட ரீதியில் தேனீ வளர்ப்பை ஊக்குவிப்பதற்கு 75 பயனாளிகளுக்கு 300 தேனீ வளர்க்கும் உபகரணங்களும் ஐ.எல்.ஒ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பழச் செய்கை கிராமத்தை ஊக்குவிப்பதற்காக 5625 கொடித்தோடைக் கன்றுகள், 50000 அன்னாசி, 3125 இனிப்புத் தோடை, 125 கிராம் பப்பாசி விதைகளும் வழங்கப்பட்டன.
மேலும்,விவசாயக் கிணறுகள் நான்கு அமைப்பதற்கு தலா ஒன்றைரை இலட்சம் ரூபாய் நிதியும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago