Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 17 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டேயரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் அ;ம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.கலீஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் கல்லோயா வலதுகரை, அக்கரைப்பற்று விவசாயப் பிரதேசங்களில் நெற்செய்கை 23,074 ஏக்கரிலும் கரும்புச் செய்கை 18,630 ஏக்கரிலும் உப உணவுச் செய்கை 120 ஏக்கரிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கல்லோயா வலதுகரை, அக்கரைப்பற்று பிரதேசத்தின் 2016ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கைக்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
இவ்வருட சிறுபோக விவசாய விதைப்பு வேலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல்; திகதி முதல் 30ஆம் திகதிவரை மேற்கொள்ளப்படும். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி அறுவடை மேற்கொள்வதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இலங்கை நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து வருவதால், உப உணவுச் செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை விவசாய அமைச்சு மற்றும்; விவசாயத் திணைக்கள தேசிய உப உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில், உப உணவு உற்பத்தியிலும் தன்னிறைவு அடைவதற்காக 20 சதவீதத்தை உப உணவுச் செய்கைக்கு பிரயோகிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
ஏக்கரொன்றுக்கு நெற்செய்கையின் மூலம் கிடைக்கும் இலாபத்தை 0.25 ஏக்கரில் உப உணவுச் செய்கையின்; மூலம் பெறமுடியும் என்பதை விவசாயிகள் அறிவதில்லை.
மேலும், 50 சதவீத மானிய அடிப்படையில் உப உணவு பயிர் விதைகளை எமது திணைக்களம் வழங்குவதுடன், அவற்றை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது' என்றார்.
'நஞ்சு கலந்த இராசாயனப் பொருட்களை பாவிக்காது பரீட்சார்த்தமாக 100 ஏக்கரில் நெற்செய்கையை எமது திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இதனைப் பரீட்சார்த்தமாகக் கொண்டு நெல்லை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளோம்.
வெளிநாடுகளிலிருந்தே அதிகமான உப உணவுப் பொருட்களை இலங்கை இறக்குமதி செய்கின்றது. இதனால், எமது மக்களின் செலவீனங்கள் அதிகரித்து வருவதுடன், நாட்டின் தேசிய உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago