Princiya Dixci / 2021 மார்ச் 17 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அண்மைக்காலமாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பி, அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதை ஏற்கமுடியாதென அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன பரிபாலன இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (17) மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தனது கருத்துரைக்கையில், “எமது அரசாங்கமானது கடந்த கால அரசாங்கம் போல் செயற்படாது. மக்களின் அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. இதனை சகிக்க முடியாமல் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர்.
“காடழிப்பு விடயத்தில் அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுவதாகக் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு எதுவும் இல்லை. சமூக ஊடகங்களில் பலரும் தெரிவிக்கின்ற கருத்துகளை ஆராய்ந்த போது தான் அவர்கள் எம்மீது அவதூறு செய்கின்றனர் எனப் புரிகின்றது.
“எனவே, எம்மை விமர்சிப்பதன் ஊடாக எமது அரசாங்கத்தையோ அல்லது எனது அமைச்சின் செயற்பாட்டையோ தடுக்க முடியாது. மக்களுக்குப் பொறுப்பு சொல்லும் விதத்தில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும்” என்றார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago