Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில், நீண்ட காலமாக பல அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் செயற்பாடு இல்லாத நிலை காணப்படுவதாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
இதன் காரணத்தாலேயே, அம்பாறை மாவட்டத்தில் கூடுதலாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி நேரத்தை செலவழித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை, வேப்பையடி ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், வைத்தியப் பொறுப்பதிகாரி திருமதி டொக்டர் சித்தி ஜாயிஷா அனீஸ் தலைமையில் நேற்று (01) மாலை நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “அம்பாறை மாவட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தியாக வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாம் இங்கு இறங்கி இருக்கின்றோம்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இங்குள்ள மக்களுக்கு எந்தவோர் அபிவிருத்திப் பணியையும் மேற்கொள்ளவில்லை. வேலைவாய்ப்பைக் கூடப் பெற்றுக் கொடுக்கவில்லை.
“அரசியல் பலத்தை மக்களின் நலன் சார்ந்த விடயங்களில்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, வெறுமனே நாடாளுமன்றம் சென்று வருவதற்காக அல்ல. மக்களின் தேவைகளையும் குறை - நிறைகளையும் அறிந்து, அவற்றைத் தீர்ப்பதற்கான வினைத்திறனுடன் செயற்படத் தான் நாடாளுமன்றுக்கு அனுப்பியுள்ளனர்” என்றார்.
35 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago