2025 மே 03, சனிக்கிழமை

அரசாங்க நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்யுமாறு கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், நல்லதம்பி நித்தியானந்தன்

வாழைச்சேனை கமநலசேவைப் பிரிவில் தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நெல்லுக்கு அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையையும் விட குறைவான விலையில் தனியார் நெல் கொள்வனவு செய்வதை எதிர்த்து, தங்களது நெல்லை அரசாங்க நிர்ணய விலையில் வாங்க வேண்டுமெனக் கோரி, அப்பகுதி விவசாயிகள், இன்று கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை கமநல சேவை பிரிவிலுள்ள விவசாய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்த இந்தக் கவனயீர்ப்பு பேரணியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேசசபை முன்னால் ஆரம்பமாகிய இந்தக் கவனயீர்ப்பு பேரணி, பிரதான வீதி வழியாக ஓட்டாவடி பிரதேச செயலகத்தை வந்தடைந்ததுடன், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன ஆகியோரிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரினை, விவசாயிகள் கையளித்தனர்.

விவசாயிகளிடம் மகஜரினைப் பெற்றுக் கொண்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபர் கருத்து தெரிவிக்கையில், "ஏழை விவசாயிகள் பாதிப்படையாத வகையில் அவர்களது நெல் கொள்வனவு இடம்பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X