Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 மே 21 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டமானது பயிர்ச்செய்கையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் பிரதேசமாக மாறிவருகின்றது. ஆனாலும், பயிர்ச்செய்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருள்களை சந்தையில் விற்பனை செய்ய முடியாத நிலையும் உருவாகி வருகின்றது.
தங்களது உற்பத்திகளுக்கு தகுந்த விலை கிடைக்காமையால் பயிர்ச்செய்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பொன்னாங்காணி செய்கைக்கு பெயர் பெற்ற அக்கரைப்பற்று தீவுக்காலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பொன்னாங்காணி அறுவடை செய்ய முடியாமல் 5 அடிவரை வளர்ந்துள்ளதாக பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டம் முழுவதுக்குமான விநியோகத்தை மேற்கொண்ட பொன்னாங்காணி கீரை உள்ளூரில் கூட விற்பனை செய்ய முடியாதுள்ளதுடன், அறுவடை கைவிடப்பட்டதன் காரணமாக காடு போல் வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் 500 தொடக்கம் 600 கட்டுவரை விற்பனை செய்த பொன்னாங்காணி தற்போது 70 கட்டுவரையில் விற்பனை செய்வதாகவும் குறிப்பிட்டனர்.
மீதமானவை கால்நடைகளுக்கே வழங்கப்படுவதாகவும் நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சம் காரணமாகவே தமக்கு இந்த நிலை உருவாகியுள்ளதாகவும் கவலை வெளியிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago