2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு இடைநிறுத்தம்

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

நவராத்திரி விழாக்காலத்தில், குறிப்பாக பாடசாலைகளுக்கு மிக முக்கியமான வாணிவிழாத் தினங்களில், கல்முனை வலயத்தில் ஆசிரியர்களுக்காக நடத்தப்படவிருந்த  கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைஆசிரியர்சேவை வகுப்பு 2(1) இலிருந்து தரம் 1க்கு பதவியுயர்வு பெறுவதற்கான செயலமர்வு, இம்மாதம் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் நடத்த, கல்முனை வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திட்டமிட்டு அழைப்புக் கடிதங்களை, ஆசிரியர்களுக்கு அனுப்பியிருந்தது.

எனினும், வாணி விழாத் தினங்களாகிய மேற்கூறப்பட்ட தினங்களில் இந்து ஆசிரியர்கள், தமது பாடசாலை சமயச் சடங்கில் பங்குபற்றவேண்டியிருப்பதால் இதனை ஒத்திவைக்குமாறு,  ஆசிரியர்கள் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதியும் இந்து சமயப் பிரதிநிதியுமான வி.ரி.சகாதேவராஜா, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீலிடம் தொடர்புகொண்டு, இவ்வேண்டுகோளை விடுத்தார்.

இதனையடுத்து, மேற்படி கருத்தரங்கை உடனடியாக இடைநிறுத்தம் செய்து பிறிதொரு தினத்தில் நடத்த பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .