Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை வழங்குமாறு, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள போதிலும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு இதுவரை கொடுப்பனவு வழங்கப்படவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தேசிய ரீதியில் குறிப்பாக பரீட்சை திணைக்களத்தால் வருடாந்தம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.எனினும், ஒதுக்கப்பட்ட மற்றும் அதற்கேற்ப வழங்குவதற்கென அனுமதிக்கப்படும் கொடுப்பனவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
“தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்துள்ள செலவினங்களை நோக்கும் போது வழங்கப்படும் கொடுப்பனவானது எவ்விதத்திலும் போதுமானது அல்ல. பொருளாதாரப் பிரச்சினைகள் மத்தியிலும் தமது கடமைகளைப் பொறுப்புணர்வுடன் செவ்வனே நிறைவேற்றிய ஆசிரியர்களுக்கு பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் பொறுப்பற்றுச் செயறாபடுவது கவலைக்குரியது.
“உரிய ஆசிரியர்களுக்கு உடனடியாக கொடுப்பனவு நிதியை ஒதுக்குமாறும் அவ்வாறு செய்யாதவிடத்து ஒன்றிணைந்த ஆசிரிய சங்கங்களாக இது தொடர்பாக மேலதிக செயற்பாடுகளை முன்னெடுப்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago