2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆசிரிய ஆலோசகர்களுக்கு ​மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிவரும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மாதாமாதம் சம்பளத்துக்கு மேலதிகமாகப் பெற்று வந்த 1,500 ரூபாய் விசேட கொடுப்பனவு இரட்டிப்பாக அதாவது 3,000ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பணியாற்றிவரும் சுமார் 450 ஆசிரிய ஆலோசகர்கள் இம்மாதம் முதல் இவ்வதிகரிப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், இன்று (20) அறிவித்தார்.

இவ் அதிகரித்த 3,000 ரூபாய் கொடுப்பனவு 2020.01.01இலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இக்கொடுப்பனவு, வடக்கு மாகாணத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுவந்தபோதிலும் கிழக்கில் பல வருடகாலமாக 1,500 ரூபாயே வழங்கப்பட்டுவந்தது. பலரும் பலகோணங்களில் கேள்வியெழுப்பியபோதிலும் இவ்வருடம்தான் அது நடைமுறைக்கு வருகின்றது. 

இதேவேளை, சேவைக்காலஆசிரிய ஆலோசகர்களுக்கு தனியானதொரு சேவை உருவாக்கப்பட்டு, அங்கிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள போதிலும் இன்னும் அது அமுலுக்குவரவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X