2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஆசிரிய ஆலோசர்கர் நியமன கடிதங்கள் வழங்கிவைப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 15 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேதசகா

இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு தெரிவான சம்மாந்துறை வலய ஆசிரிய ஆலோசகர்கள் எழுவருக்கு நியமன கடிதங்கள், சம்மாந்துறை வலய கல்விப் பணிமனையில் இன்று புதன்கிழமை  (15) வழங்கி வைக்கப்பட்டன.

நியமனக் கடிதங்களை, சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டொக்டர் உமர் மௌலானா வழங்கி வைத்தார்.

கல்விசார் உத்தியோகத்தர்களின் நலன்புரிச்சங்கத் தலைவரும் உதவிக்  கல்விப் பணிப்பாளருமான வீ.ரி.சகாதேவராஜா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

வலய பிரதிக் கல்வி பணிப்பாளர்களான அப்துல் மஜீத் ஹைதர் அலி,  திருமதி நிதர்ஷினி மகேந்திர குமார், உதவி கல்வி பணிப்பாளர்களான றியால், பரமதயாளன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

கல்வி அமைச்சின் நியமன கடிதங்களை ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எல் .மன்சூர், கே.எம்.நஜாஸ்,  எம்.ஜௌபர், கே.அக்பர், திருமதி ராஜேஸ்வரன், கே.அற்புதராஜா மற்றும் கே.எம். றிஸ்வி ஆகிய 7 பேர் பெற்றுக்கொண்டனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X