Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 டிசெம்பர் 27 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“மகப்பேற்று மனையாக இருந்த இடத்தை ஆதார வைத்தியசாலை என்ற நிலை வரை தரமுயர்த்துவதில் அரசியல்வாதிகளின் பங்கு அளப்பரியது” என ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர்
எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான
எம்.எஸ். சுபைரின் ஒரு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், வைத்தியசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு, இன்று (27) ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“காலஞ்சென்ற பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் ஏறாவூரில் ஒரு மகப்பேற்று மனையாகத் தொடங்கப்பட்ட இவ்வைத்தியசாலை, அதற்குப் பின்னர் வந்த சகல அரசியல்வாதிகளினதும் ஒத்துழைப்பினால் அபிவிருத்தி கண்டு வந்துள்ளது.
கடைசியாக இதனை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்துவதில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் அரும்பணியாற்றியிருக்கின்றார்.
தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் இவ்வைத்தியசாலை உள்வாங்கப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் இது சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையாக மிளிரும் என்பதில் ஐயமில்லை” என்றார்.
11 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025