Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மார்ச் 20 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.எல்.எம்.ஷினாஸ், பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்றாஸ்
மருதமுனை ஊடகவியலாளர் றாசிக் நபாயிஸ் எழுதிய "ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி" எனும் கட்டுரை தொகுப்பு நூல் வெளியீடு, கலாநிதி பிர்தெளஸ் சத்தார் தலைமையில், மருதமுனை கலாசார மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றது.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வை மருதமுனை ஆவணக் காப்பகம் ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி கலந்து கொண்டதுடன், நூல் பற்றிய ஆய்வுரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் நிகழ்த்தினார்.
விசேட அதிதிகளாக நூலாசிரியரின் தந்தை ஓய்வு நிலை அதிபர் ஏ.ஆர். அப்துல் றாசிக், பிரதிப் பணிப்பாளர் (பிறை வானொலி) பஸீர் அப்துல் கையூம், ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் கவிஞர் மருதமுனை ஹஸன், அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் எம்.பி. சம்சுதீன், சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிழக்கின் கேடயம், கிழக்கு முஸ்லிம் பேரவை, மருதமுனை ஓட்டோ சாரதிகள் சங்கம், முனையம் ஊடக வலையமைப்பு, சிலோன் மீடியா போரம், விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் எனப் பலரும் நினைவுச்சின்னம், பொன்னாடை போர்த்தி நூலாசிரியரை கௌரவித்தார்கள்.
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago