2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆற்றுமண் அகழ்ந்த இருவர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி, சட்டவிரோதமாக ஆற்றுமண் அகழ்வில் ஈடுபட்ட இருவரை, இன்று காலை கைதுசெய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அம்பாறை - அக்கரைப்பற்று சாகாமம் வீதியால் இரு உழவு இயந்திரத்திரங்களின் இழுவைப்பெட்டிகளில் ஆற்றுமண் அகழ்ந்து ஏற்றிக்கொண்டு வரும் போது, இரு உழவு இயந்திரங்களின் சாரதிகளையும் கைதுசெய்ததுடன், மண் ஏற்றப்பட்ட உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், ஆலையடிவேம்பு  பிரதேசத்தை சேர்ந்த 29, 35 வயதுகளையுடைய நபர்கள் எனவும் இருவரும் விசாரணைகளின் பின்னர், நாளை (06) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .