Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவரது உறுப்புரிமையும் இரத்துச்செய்யப்பட்டள்ளதாக, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜ இராஜேந்திரா தெரிவித்தார்.
அதேவேளை, தவிசாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலாக அவரது உறுப்புரிமையை நீக்கும் பொருட்டு, சட்டரீதியான முடிவெடுக்கக்கூடிய ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி போட்டியிட்ட பங்காளிக் கட்சியான தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு அறிவித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தற்கால நிலைப்பாடு தொடர்பில் ஆலையடிவேம்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (09) கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்காக தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றதுடன், 11 உறுப்பினர்களின் உதவியோடு ஆட்சியைக் கைப்பற்றியது.
“இதன் பயனாக, எமது கட்சியைச் சேர்ந்த க.பேரின்பராசா தவிசாளராகவும் தெரிவுசெய்யப்பட்டார். இதன்மூலம், பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையாற்றுவார் என்பதுடன், கட்சிக்கும் விசுவாசமாக செயற்படுவார் என எதிர்பார்த்தோம்.
“ஆனால், அவர், பொதுமக்களுக்கான சிறந்த சேவையை ஆற்றவில்லை. அத்துடன், கட்சியின் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைக்காதவராகவும் மாறியுள்ளார்.
“ஆகவே, பிரதேச அபிவிருத்தி, மக்களின் நன்மை, கட்சியின் எதிர்காலம் அகியவற்றைக் கருத்திற்கொண்டு, கட்சியின் பொதுக்குழு, ஆலையடிவேம்பு பிரதேச மக்களை ஒன்றுகூட்டி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதுடன், இனிவரும் காலங்களில் கட்சிக்கும் அவருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெரிவிக்கின்றேன்.
“மேலும், அவர் தொடர்பான செயற்பாட்டுக்கும் கருத்துக்கும் ஈரோஸ் பொறுப்புக் கூறாது” எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago