Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த காலங்களை விட இந்த ஜனாதிபதித் தேர்தல் கடினமானதாக இருக்கும் என்பதால் அலசி ஆராய்ந்து பார்த்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவோமென, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்போன்று, நேற்று (14) மாலை பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் தலைமையில் நடைபெற்ற போது, அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய ஹரீஸ் எம்.பி, முஸ்லிங்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் அதிகமான பிரச்சினைகள் தேங்கியிருக்கியிருப்பதாகவும் தோப்பூர் மக்களுக்கான பிரதேச செயலக உருவாக்கத்தை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்ட அமைச்சரைப் பத்திரத்தைக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனும் ஏனைய சில தமிழ் எம்.பிக்களும் தலையிட்டுத் தடுத்துள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அநீதியாக நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், களுவாஞ்சிகுடியில் நடந்த கூட்டமொன்றில் பொய்யான பல தகவல்களை இனவாதமாக தமிழ் மக்களிடம் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி பேசியுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
பொய்யான பல தகவல்களை ஊடகங்களிடமும், மக்களிடமும் கூட்டமைப்பின் எம்.பிக்கள் பரப்பி வருகின்றார்கள் எனவும் அவர்களின் கருத்துகளால் முஸ்லிம் புத்திஜீவிகளும் கூட சில நேரங்களில் குழம்பி போகிறார்கள் எனவும் அவர் விசனம் தெரிவித்தார்.
11 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
34 minute ago