2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இடமாற்றத்தைக் கண்டித்து சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட செயலாளர் துசித்த பி.வணிகசிங்கவின் இடமாற்றத்தைக் கண்டித்து, அம்பாறை மாவட்டத்திலுள்ள பொது அமைப்புகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து, அம்பாறை  நகர் சுற்று வட்டார மணிக்கூட்டுக் கோபுரம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று (02) ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளருக்கு விதிமுறைகளுக்கு அப்பால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச கடமைகளுக்கு அரசியல் தலையீடுகள் தடையாக இருக்கின்றன எனவும் தெரிவித்து, இவற்றைக் கண்டித்து, மாவட்ட செயலாளருக்கு ஆதரவு வழங்கும் நோக்கில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவினங்கள் மத்தியிலும் இன, மத, பிரதேச அரசியல் வேறுபாடு காட்டாது, மிகவும் பக்க சார்பின்றிச் சேவையாற்றி வந்த மாவட்ட செயலாளரை, அரசியல்வாதியொருரின் விருப்பு, வெறுப்புக்காக அரசாங்கம் இடமாற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இக்கோரிக்கை அடங்கிய மகஜரொன்றையும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X