2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இடமாற்றப் பட்டியல் வெளியாகியது

Princiya Dixci   / 2020 நவம்பர் 23 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா 

கிழக்கு மாகாண இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் 2021ஆம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ. ஜீ.திஸாநாயக அறிவித்துள்ளார்.

இவ்விடமாற்றம் தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அறிவிக்கப்படும் எனவும், குறித்த திகதிக்குப் பின்னர் காலதாமதமாகி கிடைக்கும் மேன்முறையீடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் தெரிவித்தார். 

மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவை, மொழிபெயர்ப்பாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர் சேவை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலகப் பணியாளர் சேவை என்பனவற்றைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வருடாந்த இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இடமாற்றங்கள் யாவும் 2021.01.01 முதல் நடைமுறைக்கு வரும் எனவும், மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்)  அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .