2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இடி,மின்னல் தாக்கத்தினால் வீட்டின் ஒருபகுதி சேதம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அம்பாறை மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு அடை மழை பெய்துவ்நத நிலையில், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாச்சிக்குடா பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தினால் வீடொன்றின்  சமையலறையின் கூரை, மின்மானி உள்ளிட்டவை சேதமடைந்தன.  

மேலும் அருகில் அமைந்துள்ள மற்றுமொருவரின் வீட்டின் மின்னிணைப்பிற்கான பகுதிகளும் சேதமடைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு சென்ற கிராம உத்தியோகத்தர் அ.சுபராஜ் சேதங்களை பார்வையிட்டதுடன், அக்கரைப்பற்று பொலிசாருக்கும் மின்சார சபையினருக்கும் தகவல்களை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .