2025 மே 12, திங்கட்கிழமை

‘இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கவும்’

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

மாணவர்களது வகுப்பறைக் கற்றலுக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிக்காது இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டுமென, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா தெரிவித்தார்.

பாடசாலைக் காலங்களில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்தான், பிற்காலத்தில் ஏதேனுமொரு துறையில் ஆளுமையுள்ளவர்களாகத் திகழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ச​ர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, பாலமுனை ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை மாணவர்களிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், பாலர் பாடசாலை பணிப்பாளர் றிஸ்மியா ஹானின்  தலைமையில், பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நேற்று (02) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம் அதிதியாகக் கலந்துகொண்டு உயைாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X