2025 மே 05, திங்கட்கிழமை

இணையவழியில் சர்வதேச ஆய்வரங்கு

Princiya Dixci   / 2021 ஜூலை 28 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, நூருள் ஹுதா உமர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இணையவழியூடான முதலாவது சர்வதேச ஆய்வரங்கு,“நிலைபேறான அபிவிருத்திக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி தொழில்நுட்பம்”எனும் தொனிப் பொருளில், நேற்று (27) நடைபெற்றது.

தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற, ஆய்வரங்கில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இவ்வாய்வரங்கின் பிரதம பேச்சாளராக கலந்துகொண்ட மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு கல்வி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் அஜித் டி அல்விஸ் இணையவழியில் உரையாற்றினார்.

இவ்வாய்வரங்கில் சுமார் 50 ஆய்வுக் கட்டுரைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டதாக, பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டு, 04 வருடத்துக்குள் முதலாவது சர்வதேச ஆய்வரங்காக இது நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X