Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
எஸ்.ஜமால்டீன் / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் “இனிய பாரதி” என அழைக்கப்படும் குமார சாமி புஸ்பகுமாரை, மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான முஹம்மது ஹனிபா முஹமட் ஹம்ஸா உத்தரவிட்டார்.
சந்தேக நபர், நீதமன்றத்தில் இன்று (20) ஆஜர்படுத்தப்பட்டபோதே, மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரதேசத்தில் ஐவரும் ,அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசததில் ஒருவருமாக 06 பேர், 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக உறவினர்களால், பாதுகாப்பு அமைச்சு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகங்களில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, மேற்படி சந்தேக நபரான இனிய பாரதிக்கு எதிராக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆறு வழக்குகளிலும் இன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தொடர்ந்தும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிலரை ஆட்கடத்தலில் ஈடுபடுத்தியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் குறித்த வழக்குகள், இனியபாரதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago