Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஜனவரி 10 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் என்றவகையில் நீங்களும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் என்றவகையில் நானும் இன, மத, கட்சி பேதமின்றி பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுவோமென, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு, இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண அளுநருக்கு இன்று (10) அவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே, இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருப்பதாவது, கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் குறிப்பாக இளைஞர், யுவதிகளுக்கு வளமான எதிர்காலத்தைத் தோற்றுவிப்பதற்கும் நாமிருவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் முதன் முதலாக ஆளுநராக நியமிக்கப்பட்டமையை இட்டுத் தான் பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், முதிர்ந்த அனுபவம் கொண்ட அரசியல் தலைமையான நீங்கள், இந்த மாகாண சபையை வினைத்திறன் மிக்கதாக வழிநடத்துவீர்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது அமைச்சின் ஊடாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளில் பல அபிவிருத்திகளை, கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் தான் தயாராகி வருவதாகவும் அவ்வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை கோருவதாகவும் அவர் கோரியுள்ளார்.
4 minute ago
7 minute ago
14 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 minute ago
14 minute ago
53 minute ago